என் சிந்தனையில் விளைந்த செவ்வந்திப் பூக்கள் !

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

(006) அறமும் ஆரியமும் !

அறமும் ஆரியமும் 
**********************

பிறப்பொக்கும் என்கிறது அறம்!
பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கிறது ஆரியம்!

ஒருவனுக்கு ஒருத்தி என்கிறது அறம்!
ஐந்துபேருக்கு ஒருத்தி என்கிறது ஆரியம்!

காமத்தை அடக்கு என்கிறது அறம்!
காமக்கதைகளைக் கற்பிக்கிறது ஆரியம்!

பொய்யாமையைப் பேசுகிறது அறம்!
பொய்க்கதைகளையே புராணமாய்ப் பேசுவது ஆரியம்!

பிறன்மனை நோக்காப் பேராண்மை பேசுகிறது அறம்!
பெண்களின் ஆடைகளைத் திருடி பார்த்து மகிழ்கிறது ஆரியம்!

போரைத் தவிர்க்க சொல்கிறது அறம்!
போர்வெறியைத் தூண்டுவது ஆரியம்!

ஒழுக்கமே உயர்குடி என்கிறது அறம்!
ஒழுக்கமற்றவனையும் உயர்குடி என்கிறது ஆரியம்!

கள்ளுண்ணாமையைப் பேசுகிறது அறம்!
சோம , சுராபானம் அருந்துகிறவனைக் கடவுள் என்கிறது ஆரியம்!

நிலையாமை பேசுவது அறம்!
மாற்றமுடியாததென்று சனாதனம் பேசுவது ஆரியம்!

அறம் காப்போம்!
ஆரியம் தவிர்ப்போம்!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அன்புடன்,


 பாவலர் அ. யாழ்த்தமிழன்,
 [ஆசிரியர்]
 புதுச்சேரி.

(005) அருட்தாய் அன்னை தெரசா வாழ்க!!


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


அன்பொன்றே மாமறையாய் அகத்தினிலே ஏற்று 

அடுத்தவரின் துன்பத்தைத் தம்துயராய்க் கொண்டு 


தன்னலத்தைக் கருதாது தவித்தோர்க்கு வாழ்வாய்

தாயிழந்த சேய்க்கெல்லாம் தாலாட்டும் தாயாய்இன்பத்தை ஈந்தாரே இன்னலுற்றோர்க் கெல்லாம்

இவர்போலே யார்வருவார் இவ்வுலகு காண!


பொன்னுலக மாந்தரெல்லாம் போற்றுகின்ற அன்னை! 

புகழ்தூய தெரசாவைப் போற்றிடுவோம் நாமே!


ஏதிலார்க்கு வாழ்வளித்தார் இயலார்நோய்த் தீர்த்தார்

ஏழைகளுக்காற் றும்தொண்டே இறைத்தொண்டு என்றார்


போதிமைந்தர் புத்தரைப்போல் பூந்துறவு பூண்டார் 

பூவுலகில் எளியவர்க்குப் புத்தொளியைத் தந்தார்


ஊதியமாய் இசைவாழ்வை உலகத்திலே பெற்றார்!

  உயிர்க்கெல்லாம் இரக்கத்தின் உருவமாக நின்றார்!


மேதினியில் அன்புதனை மெய்யறமாய்க் கொண்டார்

 மெழுகுபோல் தனைஈந்த அருட்தாயே வாழி !!


🌹🌹🌹அன்புடன்,

 பாவலர் அ.யாழ்த்தமிழன், 

ஆசிரியர் , 

புதுச்சேரி.🌹🌹🌹

                                           ***************

                                                     (என்னுடைய தூவல் ஓவியம்)


செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

(004) அறவெண்பா!

 அறவெண்பா!

🍁🍁🍁🍁🍁🍁

அறநெறி யாதென ஆய்ந்திடல் நன்றாம்

குறளைத் துணையெனக் கொண்டே!- குறையுள 

ஆரியப்  பண்பை யகற்றிட ஓங்குமே 

நேரிய நல்லறம் தான்.வாய்மையும் ஈதலும் வாழ்வறமாய் ஏற்றுநிதம் 

தூய்மை மனத்தார் துலங்குவார் !- ஆய்ந்துநல்

அன்பே உயர்ந்த அறமெனக் கொண்டுலகில் 

இன்பமாய் வாழ்தல் நலம். உயிர்களிடம் அன்புசெயல் உள்ளத்தில் தூய்மை

முயன்றுநிதம் கொள்வீர் முறையே! - நயமிலாக்

காமம் வெகுளி களைந்து துணிவுடன்

தீமையை மாய்த்தல் சிறப்பு.

                                                                  

 அன்புடன், பாவலர் அ. யாழ்த்தமிழன்,

புதுச்சேரி

(003) தமிழ் அறம் எங்கே?

 [6:38 pm, 21/08/2021] Yesuraja Jeasankari: தமிழ் அறம் எங்கே?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தமிழரின் அறம்தான் எங்கே?

தமிழ்நிலச் செழுமை எங்கே?

நிமிர்நடை செருக்கு எங்கே?

நெறியுடை வாழ்வு எங்கே?

அமிழ்தமாய்ப் பேசி வந்த 

அழகுடைத் தமிழ்தான் எங்கே?

குமிழ்போல் தமிழர் மாண்பைக்

குறைபட உடைத்தோர் எங்கே?


உயர்ந்தவர் தாழ்ந்தோர் இல்லா 

ஓங்கிய சமூகம் எங்கே?

பயன்மிகு நெறியில் வாழ்ந்த 

பாங்குடைப் பண்பா டெங்கே?

அயலவர் தலைமைத் தாங்கா

ஆளுமைத் தகைமை எங்கே?

வியத்தகு சான்றாய்க் கண்ட

வீரமும் அறிவும் எங்கே?அறநெறி பாடல் ஈந்த 

 அறிவுடைப் புலவன் எங்கே?

நிறமதில் பிரிவைக் காணா

நேரிய குமுகம் எங்கே?

விறலியர் பாணர் போன்ற 

விழுமிய கலைஞர் எங்கே?

பிறப்பினால் தமிழர் என்ற

பெருந்தகைச் சிறப்பு எங்கே?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அன்புடன் பாவலர் அ. யாழ்த்தமிழன், புதுச்சேரி.

[7:23 pm, 21/08/2021] Yesuraja Jeasankari: தமிழ் அறம் எங்கே?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தமிழரின் அறம்தான் எங்கே?

தமிழ்நிலச் செழுமை எங்கே?

நிமிர்நடை செருக்கு எங்கே?

நெறியுடை வாழ்வு எங்கே?

அமிழ்தமாய்ப் பேசி வந்த 

அழகுடைத் தமிழ்தான் எங்கே?

குமிழ்போல் தமிழர் மாண்பைக்

குறைபட உடைத்தோர் எங்கே?


உயர்ந்தவர் தாழ்ந்தோர் இல்லா 

ஓங்கிய சமூகம் எங்கே?

பயன்மிகு நெறியில் வாழ்ந்த 

பாங்குடைப் பண்பா டெங்கே?

அயலவர் தலைமைத் தாங்கா

ஆளுமைத் தகைமை எங்கே?

வியத்தகு சான்றாய்க் கண்ட

வீரமும் அறிவும் எங்கே?


காதலைக் கண்டு சேர்ந்த 

கற்புடை வாழ்வு எங்கே?

ஈதலில் இன்பம் கண்ட

இல்லற மாண்பு எங்கே?

மாதரில் ஓர்மைக் கொண்டு 

மகிழ்ந்தபொற் காலம் எங்கே?

ஓதியும் கற்றும் வாழ்ந்த

உயர்ந்தநற் கழகம் எங்கே?அறநெறி பாடல் ஈந்த 

 அறிவுடைப் புலவன் எங்கே?

நிறமதில் பிரிவைக் காணா

நேரிய குமுகம் எங்கே?

விறலியர் பாணர் போன்ற 

விழுமிய கலைஞர் எங்கே?

பிறப்பினால் தமிழர் என்ற

பெருந்தகைச் சிறப்பு எங்கே?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அன்புடன்,

பாவலர் அ. யாழ்த்தமிழன், 

புதுச்சேரி.செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

(002) தமிழ்க் குயிலுக்கு என் வணக்கமும் நன்றியும் !


*வணங்குகிறேன் வண்ணக் குயிலே*

தமிழ்ச் சுடரை  என்னுள் ஏற்றி வைத்த  தலைவன், இனிய தமிழுக்கு இசை சேர்த்த ஏந்தல்,   தண்டமிழ்க்  கருவூலம், பொன்றாப் புகழ் வாரி , புதுவைத் தமிழ்க் குயில்பாவேந்தர் பாரதிதாசனுக்கு என்  வணக்கமும் நன்றியும்  ! 


வலைப்பூ தொடங்கியுள்ள இந்த நன்னாளில் உன் பாடலை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறேன் ! 

------------------------------

                    தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
                  தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
                  தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
                  தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
                  தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
                                                         (தமிழுக்கும் அமுதென்று)


                  தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
                  தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
                  தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
                  தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
                  தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
                  தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
                  தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
                  தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
                                                       (தமிழுக்கும் அமுதென்று)


புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன்


-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

பாவலர் யாழ்த்தமிழன்,

ஆட்சியர்,

”பாவலர் யாழ்த்தமிழன்” வலைப்பூ

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 25]

(10-08-2021}

---------------------------------------------------------------------------------------
(001) நன்றி ! நன்றி !! நன்றி !!!

...........................ன்றி ..........................

”பாவலர் யாழ்த்தமிழன்” என்னும் இந்த வலைப்பூவை உருவாக்கி  எனக்களித்த, ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூலின் ஆட்சியர், தமிழ்த்திரு .வை.வேதரெத்தினம் ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்  !

தமிழ்த்திரு. வை.வேதரெத்தினம், வணி.இ


 -----------------------------------------------------------------------

அன்புடன்,

பாவலர் அ.யாழ்த்தமிழன்

புதுச்சேரி

[தி.ஆ:2052, கடகம் (ஆடி) 25]

{10-08-2021}

 ----------------------------------------------------------------------