என் சிந்தனையில் விளைந்த செவ்வந்திப் பூக்கள் !

பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

(004) அறவெண்பா!

 அறவெண்பா!

🍁🍁🍁🍁🍁🍁

அறநெறி யாதென ஆய்ந்திடல் நன்றாம்

குறளைத் துணையெனக் கொண்டே!- குறையுள 

ஆரியப்  பண்பை யகற்றிட ஓங்குமே 

நேரிய நல்லறம் தான்.



வாய்மையும் ஈதலும் வாழ்வறமாய் ஏற்றுநிதம் 

தூய்மை மனத்தார் துலங்குவார் !- ஆய்ந்துநல்

அன்பே உயர்ந்த அறமெனக் கொண்டுலகில் 

இன்பமாய் வாழ்தல் நலம். 



உயிர்களிடம் அன்புசெயல் உள்ளத்தில் தூய்மை

முயன்றுநிதம் கொள்வீர் முறையே! - நயமிலாக்

காமம் வெகுளி களைந்து துணிவுடன்

தீமையை மாய்த்தல் சிறப்பு.

                                                                  

 அன்புடன்,



 பாவலர் அ. யாழ்த்தமிழன்,

புதுச்சேரி

(003) தமிழ் அறம் எங்கே?

 [6:38 pm, 21/08/2021] Yesuraja Jeasankari: தமிழ் அறம் எங்கே?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தமிழரின் அறம்தான் எங்கே?

தமிழ்நிலச் செழுமை எங்கே?

நிமிர்நடை செருக்கு எங்கே?

நெறியுடை வாழ்வு எங்கே?

அமிழ்தமாய்ப் பேசி வந்த 

அழகுடைத் தமிழ்தான் எங்கே?

குமிழ்போல் தமிழர் மாண்பைக்

குறைபட உடைத்தோர் எங்கே?


உயர்ந்தவர் தாழ்ந்தோர் இல்லா 

ஓங்கிய சமூகம் எங்கே?

பயன்மிகு நெறியில் வாழ்ந்த 

பாங்குடைப் பண்பா டெங்கே?

அயலவர் தலைமைத் தாங்கா

ஆளுமைத் தகைமை எங்கே?

வியத்தகு சான்றாய்க் கண்ட

வீரமும் அறிவும் எங்கே?



அறநெறி பாடல் ஈந்த 

 அறிவுடைப் புலவன் எங்கே?

நிறமதில் பிரிவைக் காணா

நேரிய குமுகம் எங்கே?

விறலியர் பாணர் போன்ற 

விழுமிய கலைஞர் எங்கே?

பிறப்பினால் தமிழர் என்ற

பெருந்தகைச் சிறப்பு எங்கே?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அன்புடன் பாவலர் அ. யாழ்த்தமிழன், புதுச்சேரி.

[7:23 pm, 21/08/2021] Yesuraja Jeasankari: தமிழ் அறம் எங்கே?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தமிழரின் அறம்தான் எங்கே?

தமிழ்நிலச் செழுமை எங்கே?

நிமிர்நடை செருக்கு எங்கே?

நெறியுடை வாழ்வு எங்கே?

அமிழ்தமாய்ப் பேசி வந்த 

அழகுடைத் தமிழ்தான் எங்கே?

குமிழ்போல் தமிழர் மாண்பைக்

குறைபட உடைத்தோர் எங்கே?


உயர்ந்தவர் தாழ்ந்தோர் இல்லா 

ஓங்கிய சமூகம் எங்கே?

பயன்மிகு நெறியில் வாழ்ந்த 

பாங்குடைப் பண்பா டெங்கே?

அயலவர் தலைமைத் தாங்கா

ஆளுமைத் தகைமை எங்கே?

வியத்தகு சான்றாய்க் கண்ட

வீரமும் அறிவும் எங்கே?


காதலைக் கண்டு சேர்ந்த 

கற்புடை வாழ்வு எங்கே?

ஈதலில் இன்பம் கண்ட

இல்லற மாண்பு எங்கே?

மாதரில் ஓர்மைக் கொண்டு 

மகிழ்ந்தபொற் காலம் எங்கே?

ஓதியும் கற்றும் வாழ்ந்த

உயர்ந்தநற் கழகம் எங்கே?



அறநெறி பாடல் ஈந்த 

 அறிவுடைப் புலவன் எங்கே?

நிறமதில் பிரிவைக் காணா

நேரிய குமுகம் எங்கே?

விறலியர் பாணர் போன்ற 

விழுமிய கலைஞர் எங்கே?

பிறப்பினால் தமிழர் என்ற

பெருந்தகைச் சிறப்பு எங்கே?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அன்புடன்,

பாவலர் அ. யாழ்த்தமிழன், 

புதுச்சேரி.