என் சிந்தனையில் விளைந்த செவ்வந்திப் பூக்கள் !

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

(002) தமிழ்க் குயிலுக்கு என் வணக்கமும் நன்றியும் !


*வணங்குகிறேன் வண்ணக் குயிலே*

தமிழ்ச் சுடரை  என்னுள் ஏற்றி வைத்த  தலைவன், இனிய தமிழுக்கு இசை சேர்த்த ஏந்தல்,   தண்டமிழ்க்  கருவூலம், பொன்றாப் புகழ் வாரி , புதுவைத் தமிழ்க் குயில்பாவேந்தர் பாரதிதாசனுக்கு என்  வணக்கமும் நன்றியும்  ! 


வலைப்பூ தொடங்கியுள்ள இந்த நன்னாளில் உன் பாடலை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறேன் ! 

------------------------------

                    தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
                  தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
                  தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
                  தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
                  தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
                                                         (தமிழுக்கும் அமுதென்று)


                  தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
                  தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
                  தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
                  தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
                  தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
                  தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
                  தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
                  தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
                                                       (தமிழுக்கும் அமுதென்று)


புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன்


-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

பாவலர் யாழ்த்தமிழன்,

ஆட்சியர்,

”பாவலர் யாழ்த்தமிழன்” வலைப்பூ

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 25]

(10-08-2021}

---------------------------------------------------------------------------------------




2 கருத்துகள்:

  1. தமிழைச் சிறப்பித்து இதைவிட மேன்மையாக யாரும் பாடிவிட முடியாது ! காலவெள்ளத்திலும் அழியாத கருத்தோவியம் ! புதுவைக் குயிலின் இன்னிசைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது ! அருமையான இடுகை ! பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு
  2. தமிழர்கள் மறக்கவியலாத, மறக்கக் கூடாத மாபெரும் கவிஞன் பாவேந்தர் பாரதிதாசன் ! அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் !

    பதிலளிநீக்கு